இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எக்காரியத்திலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக செயல்பட்டு, சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்: பெற்றோருடன் கொஞ்சம் மனத்தாங்கல் வந்து நீங்கும். வாகனப் பயணத்தின்போது அதிக கவனம் தேவை. மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். மகான்களை தரிசிப்பீர்கள்.

கடகம்: சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகை சற்று தாமதமாக வரும். உடல்நலம், உணவு பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். பொருட்கள் சேரும்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும்.

கன்னி: உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்து, பாராட்டு பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

துலாம்: தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். புண்ணிய, சுப காரியங்களை தலைமையேற்று நடத்துவீர்கள். பண வரவு உண்டாகும்.

விருச்சிகம்: வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் கூடாது. கருத்து மோதல், பிரச்சினை வரக்கூடும் என்பதால் பேச்சில் கவனம் அவசியம்.

தனுசு: பழுதாகியிருந்த வாகனம் சரியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். இழுபறியாக இருந்த திருமண முயற்சி கைகூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

மகரம்: மனைவி வழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்: நீண்டகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அவர்கள் மூலமாக சில உதவிகள் கிடைக்கும். தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும்.

மீனம்: ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் செலுத்துவீர்கள். உடல்நலத்தில் அக்கறை உண்டாகும். மகிழ்ச்சியான சேதி தேடி வரும். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE