இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போகவும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். பூர்வீக வீடு, நிலம் ஆகியவற்றை விற்பனை செய்ய முயற்சி செய்வீர்கள்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பால்ய நண்பருடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாண பேச்சுவார்த்தை கைகூடும். உறவினர், நண்பர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.

சிம்மம்: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட வேண்டாம். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் சாதனை மகிழ்ச்சி அளிக்கும்.

தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நட்பு வட்டம் விரியும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பொருட்கள் சேரும்.

மகரம்: அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவீர். பழைய சொந்த - பந்தங்கள் தேடி வருவார்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்