இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: யாரை நம்புவது என்ற மனக் குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துகள் கூட தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.

ரிஷபம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பது அவசியம். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்.

மிதுனம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்றைய தினம் வேலைச்சுமை குறையும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

கடகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் தொல்லைகள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி தங்கும் . பணவரவு ஓரளவு திருப்தி தரும்.

சிம்மம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பண வரவு உயரும். வீண் விவாதம் தவிர்ப்பீர்.

கன்னி: மற்றவர்களை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். பூர்வீக கிராமத்து திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்கும். தியானம் செய்யவும்.

துலாம்: சாதுர்யமாக பேசி கடினமான காரியங்களை சாதிப்பீர்கள். புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பால்ய நண்பரை சந்திப்பீர்.

தனுசு: மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். நட்பு வட்டாரம் விரியும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வீட்டில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வீர்கள்.

மகரம்: சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை. பணவரவு உண்டு.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் பேச்சை ரசிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் பணஉதவி கிடைக்கும். அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும்.

மீனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவதால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். அரசு காரியங்களில் ஆர்வம் காட்டுவீர். பழைய வாகனம் செலவு வைக்கும். பொருள் சேரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்