இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உங்கள் மீது வீண் பழி வந்து நீங்கும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். பூர்வீக கிராமத்து கோயில்
விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்: ஷேர் மூலம் பணம் வரும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கலை பொருட்கள் சேரும்.

கடகம்: குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சொந்த - பந்தங்களின் வருகை அதிகரிக்கும். மனைவி வழியில்
உதவியுண்டு. பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். செலவுகள் அதிகமாகும்.

சிம்மம்: திடீர் பயணங்கள், தவிர்க்க முடியாத செலவுகள், தர்ம சங்கடமான சூழல்கள் வந்து செல்லும். அக்கம் - பக்கம் வீட்டாரிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம்.

கன்னி: மதிப்பு, மரியாதை கூடும். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். திருமண முயற்சிகள் பலிதமாகும்.
பிள்ளைகள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வர். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

துலாம்: எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: தொட்டது துலங்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். வீடு, மனை வாங்குவீர்கள். திடீர் பணப்பற்றாக்குறை யால் தடுமாற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவுவர்.

தனுசு: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பாதியில் நின்ற மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை முழுமை அடையும். வீண் விவாதம் தவிர்க்கவும்.

மகரம்: சாணக்கியத்தனமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்.பழைய பிரச்சினைகளுக்கு புது வழியில் யோசிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துத் தகராறு முடிவுக்கு வரும்.

கும்பம்: பணபலம் உயரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை வாங்குவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றி
யடையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரித்து குலதெய்வ வழிபாடு செய்வீர். பணவரவு உண்டு.

மீனம்: முன்கோபம், வேலைச்சுமை அதிகரிக்கும். அநாவசிய செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும். வீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்தேறும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்