இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிலும் வெற்றி கிட்டும். புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி பெருகும். பிரபலங்களின் உதவி கிடைத்து அவர்களின் துணையுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். பொருள் சேரும்.

மிதுனம்: வீட்டை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவது நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு அரசுப் பதவிகள் கிடைக்கும். இழந்ததைப் பெறுவீர்கள். சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக வீடு தொடர்பான பிரச்சினை முடிவு பெறும்.

கடகம்: நெடுந்தூர ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களிடமிருக்கும் அலட்சியப் போக்கால் சில சிக்கல்கள் வர வாய்ப்பு உண்டு.

சிம்மம்: தடைபட்ட வேலைகள் முழுமை அடையும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடி புகுவீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். வீண் விவாதம் தவிர்க்கவும்.

கன்னி: மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பணவரவு உண்டு.

துலாம்: மனதில் தைரியம் பிறக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். பூர்வீக வீட்டு மனையை விற்பனை செய்ய முயல்வீர்கள்.

விருச்சிகம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். . தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். அதே சமயம் நிறைய அலைச்சல் இருக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள்.

தனுசு: இளைய சகோதரர்களால் ஆதாயம் பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேற்று மதத்தவரால் அதிக நன்மை கிடைக்கும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்.

மகரம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் பிறக்கும். எப்பொழுதோ வரவேண்டிய பணம் இப்போது வந்து உங்களுக்கு கைகொடுக்கும். பழைய கடனை தீர்ப்பீர்கள். உறவினர், நண்பர் வருகையால் வீடு களைகட்டும்.

கும்பம்: உடல்நலக்குறைவு, மனச்சோர்வு, பதட்டம் வந்து போகும். உடன்பிறந்தவர்களிடையே மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொந்த பந்தம் மத்தியில் மதிப்பு கூடும்.

மீனம்: சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பணவரவு உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE