மேஷம்: உங்கள் தொலைநோக்கு சிந்தனை அதிகரிக்கும். சந்தர்ப்ப, சூழ்நிலை அறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். வீண், ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள்.
ரிஷபம்: சவாலான காரியங்களையும் சிறப்பாக செய்து பாராட்டு பெறுவீர்கள். அடுக்கடுக்காக செலவு வந்தாலும், அதற்கேற்ற வருமானமும் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
மிதுனம்: உங்கள் மனம் விரும்பும் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். முக்கியஸ்தர்களின் அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும்.
கடகம்: செயலில் வேகம் கூடும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டாகும். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பண வரவு, பொருள் வரவு உண்டு.
» 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
» தமிழக அரசு வழங்கும் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தில் அனைவரும் ஏற்பார்கள். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். நாடி வந்தவருக்கு உதவுவீர்கள்.
கன்னி: கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும்.
துலாம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். இழுபறியாக இருக்கும் விஷயத்தில், துணிச்சலாக செயல்பட்டு முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
விருச்சிகம்: கைமாற்றாக, கடனாக வாங்கிய பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். எதிலும் பொறுமை தேவை.
தனுசு: ஓய்வெடுக்கக்கூட நேரம் இல்லாதபடி, வேலைச்சுமை அதிகரிக்கும். பயணத்தால் உடல் அசதி, சோர்வு, களைப்பு வந்து நீங்கும். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மகரம்: குடும்பத்தில் சுபச் செலவுகள் இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். நீண்டநாள் கனவு நிறைவேறும்.
கும்பம்: சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும் மூத்த சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.
மீனம்: உங்கள் பேச்சாற்றல், நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் பெரிய இடத்தில் வேலை அமையும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago