மேஷம்: எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு ஏற்படும்.
மிதுனம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். கலை பொருட்கள் சேரும்.
» மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை - லஞ்ச ஒழிப்பு டிஜிபி எச்சரிக்கை
சிம்மம்: விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
கன்னி: சகோதர வகையில் நன்மை பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்.
துலாம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சரியான நேரத்துக்கு உணவருந்தவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்: எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.
தனுசு: குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். உறவினர், நண்பர் வருகையால் மகிழ்ச்சி உண்டு.
மகரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.
கும்பம்: முக மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடல்நிலை சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் சந்தோஷம் அடைவீர்கள். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு.
மீனம்: மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மற்றவர்களைப் பற்றிய வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சிறு சிறு அவமானம் ஏற்படக் கூடும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago