சிம்மம் ( மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் ) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு, குரு - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 01-06-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-06-2023 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-06-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: அரசாங்கத்தின் மூலம் அனுகூலமும் அதிகார தோரணையும் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாத குணமுடைய சிம்மராசியினரே... இந்த மாதம் சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது போல் மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.
தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.
» குரு பெயர்ச்சி 2023 - 24 | சிம்மம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்
» கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 25 - 31
குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணிகள் காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.
பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதூரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும். மேல்படிப்புக்கு திட்டமிடுவீர்கள்.
அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும்.
மகம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
பூரம்: இந்த மாதம் பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். காரிய வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களைப் பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 11-06-2023 பகல் 12:38 மணி முதல் 13-06-2023 மாலை 04:18 மணி வரை | அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மற்ற ராசிகளுக்கான ஜூன் மாத பலன்கள்: > மேஷம் | > ரிஷபம் | > மிதுனம் | > கடகம் | > சிம்மம் | > கன்னி | > துலாம் | > விருச்சிகம் | > தனுசு | > மகரம் | > கும்பம் | > மீனம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
22 mins ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago