மேஷம்: புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங் கும் அமைப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கும் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி எளிதில் கிடைக்கும்.
மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் விரைவில் முடியும். கலை பொருட்கள் சேரும்.
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒய்எஸ்ஆர் காங்., தெலுங்கு தேசம் பங்கேற்பு
» கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் | டெல்லியில் கார்கேவுடன் சித்தராமையா, சிவகுமார் ஆலோசனை
சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.
கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர் கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. பழைய நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.
தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்த - பந்தங்கள் தேடி வந்து பேசுவார் கள். புது வேலை கிடைக்க தடை, தாமதம் ஏற்படும். மனதில் அவ்வப்போது வீண் பயம் வந்து போகும்.
மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பது டன் கவுரவமும் ஒருபடி உயரும். வெளியூர் பயணத் தால் நன்மை உண்டு. அலைச்சல் இருக்கும்.
கும்பம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். இலக்கியம், கலைத் துறையில் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு.
மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதர வாக இருப்பார்கள். பொறுப்புகள் அதிகரிப்பதால் பணிச்சுமை இருக்கும். வாகனம் செலவு வைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago