இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கனவுத் தொல்லை, தூக்கமின்மை, வந்து போகும். தியானம், யோகாசனம் செய்யுங்கள். பிற்பகல் முதல் தடைபட்ட வேலைகள் முடியும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட ஏற்பாடு நடக்கும்.

ரிஷபம்: பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் தேவை. குலதெய்வம் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்துவீர்கள். மனதில் இருந்த வீண் பயம் விலகும்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் பேச்சைரசிப்பீர். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம்: எதிரிகளை வீழ்த்துவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் வெற்றியுண்டு. வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு உண்டு.

கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். பொன், பொருள் சேர்ப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

கன்னி: அலைச்சல், வீண் விரயம் வந்து போகும். கடன் பிரச்சினைகள் தலை தூக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தந்தாலும் பிற்பகல் முதல் ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும்.

துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். பேச்சில் மிடுக்கு தெரியும். பணவரவு உண்டு.பிற்பகல் முதல் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவனம் தேவை. தியானம் செய்யவும்.

விருச்சிகம்: முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசனை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். குழப்பமான மனநிலை மாறும். பணவரவு திருப்தி தரும்.

தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த காரசாரமான விவாதங்களெல்லாம் மறையும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொருள் சேரும்.

மகரம்: செய்வதறியாமல் குழம்பி தவித்துக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.

கும்பம்: வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். வருமா வராதா என்றிருந்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவரால் நன்மை பிறக்கும். ஆன்மிகப் பயணத்தால் ஏற்றம் உண்டு.

மீனம்: பிரபலங்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன் - மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்