இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நண்பர் கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களிடம் வீண் விவாதம் வேண்டாம்.

மிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும்.

கடகம்: புது வாகனம் வாங்குவீர்கள். வர வேண்டிய தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல் படுவார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். உங்கள் மதிப்பு, மரியாதை கூடும்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி: உறவினர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவிவழியில் உங்கள் தேவையறிந்து உதவு வார்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிக்கவும்.

துலாம்: பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை தீரும். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்கவும்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை அனைத்திலும் பளிச்சிடும். உறவினர், விஐபிகளால் பாராட்டப்படுவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

தனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொந்த - பந்தங்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மகரம்: உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். இடம், பொருள் ஏவலறிந்து பேசுங்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்: வீண் வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். கடன் பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீரும். நீண்ட நாளாக பேசாத உறவினர் வந்து பேசுவார்.

மீனம்: புதிதாக டி.வி., ஃப்ரிட்ஜ், செல்போன் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்