மேஷம்: பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப் பொலிவு, ஆரோக்கியம் கூடும். உறவினர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்.
ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப் பற்றாக் குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். உறவினர்களுடன் வீண் விவாதத்தைத் தவிர்ப்பீர்.
மிதுனம்: மன இறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக் கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பழைய வாகனத்தை சீர் செய்வீர்கள்.
கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். வீடு பராமரிப்புச் செலவு இருக்கும்.
» நம்பிக்கை ஊட்டும் தேர்வுகள்!
» தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல்: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். கலை பொருட்கள் சேரும்.
கன்னி: மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும் பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பால்ய நண்பர்களை சந் திக்கும் வாய்ப்பு ஏற்படும். பணவரவு உண்டு.
துலாம்: புதியவர்கள் அறிமுகவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். வழக்குகள் சாதகமாக முடியும். பழையவீட்டை விற்றுவிட்டு புதிது வாங்கத் திட்டமிடுவீர்.
விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கண்ணில் உள்ள குறைபாட்டுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.
தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. உங்கள் சொந்த விஷயத்தையெல்லாம் பிறரிடம் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.
மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை நீங்கள் தான் முன்னின்று நடத்த வேண்டியது வரும். குழந்தைகளின் படிப்புக்காக அலைய நேரிடலாம்.
கும்பம்: சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன ரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் அதிக ஆதாயம் உண்டு.
மீனம்: கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப் போராட் டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். வீண் விவாதத்தில் ஈடுபட்டு யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago