இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். கலை பொருட்கள் சேரும்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர்செய்வீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி அடைவீர்கள். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். பழைய கடனையை பைசல் செய்வீர்கள். வெளி மனிதர்களிடம் வீண் விவாதத்தைத் தவிர்க்கவும்.

சிம்மம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள்.

கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். புதிய வீடு கட்டுவதற்கு, வங்கிக்கடன் கிடைக்கும்.

துலாம்: ஒருவித படபடப்பு வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். யாருக்கும் எக்காரணம் கொண்டும் உறுதிமொழி தர வேண்டாம்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். பணவரவு உண்டு.

தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

மகரம்: தடைபட்டு வந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். சொந்த - பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். எதிர்காலம் குறித்த பயம் மனதில் வந்து செல்லும்.

கும்பம்: வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.

மீனம்: எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வீண் பேச்சைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்