இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவு வார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

ரிஷபம்: நீண்டகால பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். குல தெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். சமூகத்தில் பிரபலமானவர்கள் நண்பர்களாவார்கள். பூர்வீகச் சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

கடகம்: திடீர் பணவரவு உண்டு. வாகன பராமரிப்பை மேற் கொள்வீர்கள். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். மனதில் இருந்த தேவையில்லாத பயம் விலகும்.

சிம்மம்: சந்தர்ப்ப சூழ்நிலையைப் புரிந்துகொண்டு சமயோசித மாகப் பேசுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கன்னி: வேலைச்சுமை இருந்துகொண்டே இருக்கும். எளிதில் முடியும் விஷயங்கள் கூட இழுபறிக்குப் பிறகே முடியும். வாயு தொந்தரவால் சில அசவுகரியங்கள் ஏற்படக் கூடும். திடீர் பயணம் உண்டு.

துலாம்: அலைச்சலுடன் ஆதாயம் உண்டு. திட்டமிடாத பய ணங்கள் அதிகரிக்கும். திடீர் செலவுகளும் இருக்கும். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாக தலையிட வேண்டாம். தாயார் ஆதரவாக இருப்பார்.

விருச்சிகம்: குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். விலகியிருந்த உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

தனுசு: புதிய திட்டங்கள் மளமளவென்று நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல் படுவார்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மகரம்: சோம்பல் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.

கும்பம்: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வீண் பயம், கவலைகள் வந்து போகும். வழக்கு விவகாரங்களில் நிதானம் மிகவும் அவசியம். மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள்.

மீனம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. அலைச்சல்கள் குறையும். வாகனம் வாங்கும் முயற்சியில் இறங்கு வீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்