இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: திருமணம் கூடி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

ரிஷபம்: இல்லத்தில் அடிப்படை வசதிகள் பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உங்களுக்கு திருமணம், சீமந்தம், போன்ற சுப நிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பொருட்கள் சேரும்.

மிதுனம்: பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வீடு வாகன செலவுகள் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும்.

கடகம்: தொட்டது துலங்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். பூர்வீக வீட்டை விற்பனை செய்து, புதிய மனை வாங்குவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கன்னி: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைவாக நிறைவேறும்.

துலாம்: முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்ற வர்களின் ஆலோசனைகளை கேட்டு மயங்காதீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: உங்களின் புகழ், கவுரவம் உயரும். தடைபட்ட வேலை களை விரைந்து முடிப்பீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு உண்டு.

தனுசு: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். வீண் விவா தங்களை தவிர்ப்பீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.

மகரம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து இனி வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் செயல்படவும். வீடு வாங்குவீர்கள்.

கும்பம்: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சொந்த ஊரில் எதிர்ப்புகள் வரும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரில் சென்று முடியுங்கள். ஆன்மிக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். நண்பர்கள் உதவுவர்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். எதிலும் அவசரம் வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்