இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் சிறப்பாக கூடி வரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

ரிஷபம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அடிமனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி, நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.

மிதுனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தைரியமாக செயல்பட்டு, சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை கூடும். பல வகையிலும் பண வரவு உண்டு.

கடகம்: நீண்டகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோர் ஆசி கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். கல்யாண முயற்சிகள் நல்லபடியாக முடியும். பொருட்கள் சேரும்.

சிம்மம்: சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீண் பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். புதிய வாய்ப்புகள் வந்தால், நன்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது. அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். பண வரவு உண்டு.

கன்னி: சுபச் செலவுகள் வரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இடவசதி இன்றி தவித்தீர்களே, நல்ல இடவசதியுடன் கூடிய பெரிய வீட்டில் குடிபுகுவீர்கள். எதிலும் பொறுமை தேவை.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகத்தால் அனுகூலம் உண்டு. புது திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்: திடீர் பண வரவு உண்டு. செல்வாக்கு கூடும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பல வேலைகளையும் நீங்களே நேரில் சென்று முடிக்கவேண்டி வரும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.

தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தை உடல்நலம் சீராகும். மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பால்ய சினேகிதர்கள் உங்களை சந்திப்பார்கள்.

மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் வரக்கூடும். வாகனம் பழுதாகும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகுங்கள். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள்.

கும்பம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்: நேர்முக, மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். கணவன் -மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி, அன்யோன்யம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டில் இருந்து நல்ல சேதி வரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்