கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) பலன்கள்: அலட்டிக் கொள்ளாமல் சாதிப்ப வர்களே! இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப் புழக்கத்தையும், கௌரவத்தையும், குடும்பத்தில் நிம்மதியையும் தந்த குருபகவான் ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை மூன்றாவது வீட்டிலேயே நீடிக்க உள்ளதால் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசாமல் சில விஷயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து முடிவெடுங்கள்.
காரியத் தடைகள், டென்ஷன் வரக்கூடும். வசதி, செல்வாக்கைக் கண்டு மயங்கி தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். பெரியவர்களிடம் முக்கிய விஷயங்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. யாரையும் அநாவசியமாக வீட்டுக்குள் அழைத்து வரவேண்டாம். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். உங்களின் 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. அக்கம்பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.
குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி பாசம் கூடும். அவர்வழிச் சொத்துகள் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். மகனை அவர் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்திலேயே படிக்க வைப்பீர்கள். மகளுக்கு உங்கள் வசதிக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த மணமகன் அமைவார்.
உறவினர்கள், நண்பர்கள் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். வாகனத்தை இயக்கும்போது செல்போனில் பேசவேண்டாம். குரு 11-வது வீட்டைப் பார்ப்பதால் காரியத்தடைகள் விலகும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். மேலிடத்தை அனுசரித்துப் போக வேண்டும்..
» குரு பெயர்ச்சி பொதுப்பலன் - ஏப்.22, 2023 முதல் மே 1, 2024 வரை | ஒரு பார்வை
» சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - மகரம் ராசியினருக்கு எப்படி?
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்சினையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். முதுகு வலி, தலை வலி வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். ஊர் பொதுக் காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம்.
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை குரு பகவான் உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமாந்து போன பணம் கைக்கு வரும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீடு மாறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குரு பகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் மனைவி வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும். மன அமைதி பெற கோளறு பதிகம் படிக்கவும்.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை அவ்வப்போது அறிந்து கொண்டு முடிவெடுங்கள். வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள்.வேலையாட்களிடம் கறாராக நடந்து கொள்ளாமல் கனிவாகப் பேசி வேலை வாங்குங்கள். ஹோட்டல், விடுதிகள், வாகன உதிரி பாகங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். ஜூன், நவம்பர் மாதங்கள் சாதகமாக இருக்கும்.
உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். என்றாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உங்கள் பணியைச் சிறப்பாகச் செய்து, நல்ல பெயர் வாங்குவீர்கள். ஊதிய உயர்வு, பதவி உயர்வு உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தால் தீர யோசித்து முடிவெடுங்கள். மே, டிசம்பர் மாதங்களில் வேலைச்சுமை குறையும். கணினி துறையினருக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். விடுப்பு எடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும்.
மொத்தத்தில் இந்த குரு மாற்றம் உங்களை பலவிதங்களில் பக்குவப்படுத்துவதுடன் ஒருசிலவற்றில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
பரிகாரம்: பழநி மலையில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானையும், சித்தர் பெருமான் போகரையும் மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று தரிசியுங்கள். தமிழ்வழி பயிலும் ஏழை மாணவனின் கல்வி கட்டணத்தை செலுத்துங்கள். குருவருள் கூடி வரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago