இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் தீரும். என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

ரிஷபம்: சகோதர வகையில் பிரச்சினைகள் வந்து நீங்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் பேசும்போது, வார்த்தைகளை சரியாக கையாளவும்.

மிதுனம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை கண்டறிந்து வளர்ப்பீர்கள். வெளிமனிதர்களிடம் வீண் விவாதம் தவிர்ப்பீர்.

கடகம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பழைய கடன் தீரும்.

சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளை இசை, கலை வகுப்பில் சேர்ப்பீர்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கடன் பிரச்சினையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். பூர்வீக சொத்து விற்பனையாகும்.

துலாம்: அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். பழைய வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பணவரவு உண்டு.

விருச்சிகம்: மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அரசு காரியங்கள் கைகூடும்.

தனுசு: திடீர் யோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் உங்களை பற்றி பெருமையாக பேசுவார்கள். பழைய கடன்களில் ஒன்று தீரும். மன அமைதி பெற தியானம் செய்யவும்.

மகரம்: பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொருட்கள் சேரும்.

கும்பம்: கோபதாபம் குறையும். தடைபட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.உறவினர்கள்,நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

மீனம்: முயற்சிகள் பலிதமாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்குவீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்