இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பிறமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பழைய நண்பர்களால் தொல்லைகள் அதிகமாகும். பூர்வீக சொத்து பிரச்சினை இழுபறியாக இருக்கும்.

ரிஷபம்: எதிலும் வெற்றி கிட்டும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஷேர் மூலம் லாபம் வரும். சிலர் பழைய வாகனத்தை விற்று புதிதாக வாங்க திட்டமிடுவீர்கள். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வீடு வாங்குவது, விற்பது நினைத்த படி முடியும். நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் இருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்: சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கோயில் பஜனைகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். பணவரவு உண்டு.

சிம்மம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போகவும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். தொண்டை புகைச்சல், காய்ச்சல் வந்து நீங்கும். மனைவி, அவர்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும்.

கன்னி: மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும். தந்தைவழி உறவினர்கள் மதிப்பார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்க திட்டமிடு வீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

துலாம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டு.

தனுசு: பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். வீட்டில் கழிவுநீர், குடிநீர் பிரச்சினை தீரும். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.

மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். நீண்ட நாளாக சந்திக்காத கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.

கும்பம்: அழகு, இளமை கூடும். செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். பூர்வீக வீடு, நிலம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மீனம்: வீண் செலவுகள் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயமும் கிடைக்கும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறு விதமாகப் புரிந்து கொள்வார்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்