மேஷம்: சகோதரர்களுடன் மனவருத்தம் வரும். பணப் பற்றாக்குறை ஏற்படும். மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு. உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.
ரிஷபம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். புது தெம்பு பிறக்கும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: வழக்குகளில் நல்ல திருப்பம் வரும். அரசால் அனு கூலம் உண்டு. இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். மற்றவர்களிடம் வீண் விவாதம் தவிர்க்கவும்.
கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்தி கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
சிம்மம்: உங்களிடம் இருக்கும் சோர்வு, களைப்பு நீங்கும். உற்சாகமாக புது முயற்சிகளில் இறங்குவீர்கள். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும். நீண்ட நாளாக பேசாத உறவினர் வந்து பேசுவார்.
கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழைய வாகனம் செலவு வைக்கும்.
துலாம்: இன்றைய நாள் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். இந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும்.
விருச்சிகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், எதற் காகவும் உறுதிமொழி தர வேண்டாம். சொந்த ஊர்
விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆரோக் கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
தனுசு: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. திடீர் பயணங்கள் வரும். புது வேலையில் சென்று அமர்வீர்கள். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
மகரம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்களிடம் இருந்து வந்த பகை நீங்கும். உறவினர்களும் உதவி கரமாக இருப்பார்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். அமைதி காக்கவும்.
கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள். கலைத் துறையில் சாதிப்பீர்கள்.
மீனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். பணவரவு உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago