மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
கடகம்: எதிர்பார்த்தவற்றில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
» 'ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும்' - பாஜக நிறுவன தின விழாவில் பிரதமர் மோடி உறுதி
» சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தேவராஜூ நாகார்ஜுன் பதவியேற்பு
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி ஏற்படும்.
கன்னி: கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
துலாம்: சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள். பணவரவு உண்டு.
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.
தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண் டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங் களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். தியானம் செய்யவும்.
கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பதவி உயர்வு கிட்டும்.
மீனம்: பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைக் காதீர்கள். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago