மேஷம்: புது வாகனம், நவீன ரக மின்சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களில் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
ரிஷபம்: எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். மனோபலம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
மிதுனம்: சந்தர்ப்ப சூழ்நிலையைப் புரிந்துகொண்டு சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். வீட்டை ரசனைக்கேற்ப புதுப்பிக்க திட்டமிடுவீர்கள்.
கடகம்: சில சமயங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டி வரும். நண்பர்களால் எதிர்பாராத பிரச்சினைகள் வந்து போகும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம்.
சிம்மம்: திடீர் செலவுகளும், திட்டமிடாத பயணங்களும் ஏற்படும். சிலர் பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு முடிவுக்கு வரும்.
கன்னி: மனதில் புது தெம்பு பிறக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு.
துலாம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். அநாவசிய செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். விஐபிகளுடன் சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். கடன் பிரச்சினையை தீர்க்க வழி கிடைக்கும்.
விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்துடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்
தனுசு: கடன் பற்றிய கவலைகள், வீண் பயம் வரக் கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள்.
மகரம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். உறவினர்கள் சிலர் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.
கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.
மீனம்: எதிர்காலத்துக்கான புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago