மேஷம் - அஸ்வினி: இந்த மாதம் நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். அதனால் மனநிறைவைத் தரும். உடல் உபாதைகள் உஷ்ணம் சம்மந்தப் பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
பரணி: இந்த மாதம் வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு நிறுவன மாற்றமோ, அல்லது ஊர் மாற்றமோ ஏற்படக் கூடும். அதனால் உங்களுக்கு நன்மையே ஏற்படும். வருமானமும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் கடின உழைப்பு இருக்கும். அதற்கான முன்னேற்றம் இருப்பதால் அது பற்றி கவலைப்பட வேண்டி இருக்காது. மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு நல்லபடியாக இருக்கும். கடன் வாங்க வேண்டி வரலாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் தீபமேற்றி வழிபாடு செய்வதால் விரயச்செலவுகள் இல்லாமல் விரும்பிய செலவுகள் செய்யும் நல்வாய்ப்பை பெறலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 13, 14 | அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7
| முழுமையான மாத பலன்களுக்கு > மேஷம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
ரிஷபம் - கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் சூழ்நிலை காரணமாக மனச்சங்கடம் ஏற்படும். மற்றவர்களுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பீர்கள். அதனால் மன உளைச்சல் அதிகமாகும். வருமானத்திற்கு குறைவிருக்காது.
ரோகிணி: இந்த மாதம் வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். தக்க சமயத்தில் ஒருவருக்கு உதவி புரிவீர்கள்
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் சிலரிடம் கண்டிப்பாக நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்தமான ஆலயத்திற்குச் சென்று வருவீர்கள். விலையுயர்ந்த பொருள் ஒன்றை பரிசாக பெறுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.
பரிகாரம்: பெருமாள் கோயிலில் சுவாமிக்கு துளசி மாலையும், அம்பாளுக்கு வெண்மையான மலர்களால் ஆன மாலையும் சார்த்தி வழிபட துன்பங்கள் விலகி இன்பம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 15, 16 | அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10
| முழுமையான மாத பலன்களுக்கு > ரிஷபம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
மிதுனம் - மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். கணவன், மனைவி ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து போவது பிரச்சினைகளை தவிர்க்கும். தெய்வத்தை வழிபட நன்மைகள் நடக்கும்.
திருவாதிரை: இந்த மாதம் சிறு தடங்கல்கள் வரலாம். நன்மைகளை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். வெளிநாடு செல்ல விரும்புவர்கள் சிறிது காலம் அதை ஒத்திப் போடுவது நல்லது. பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டிய கால கட்டம்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்குத் தக்க வருமானமும், வெகுமதியும் கிடைக்கும். நல்லோர் சிலரை சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் காக்கைக்கு அன்னமிட்டு வர வெற்றி கிட்டும். எள் தீபமேற்றி சனி பகவானை வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 17, 18 | அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
| முழுமையான மாத பலன்களுக்கு > மிதுனம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
கடகம் - புனர் பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் கணவன் - மனைவியிடையே சில ஊடல்கள் வரும். முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டி வரும். வருமானம் திருப்தி கரமாக இருக்கும்.
பூசம்: இந்த மாதம் பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள நேரிடும். மனதில் இனம்புரியாத கவலை இருந்து கொண்டிருக்கும். தியானம் செய்ய நிம்மதி கிட்டும்.
ஆயில்யம்: இந்த மாதம் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம்.
பரிகாரம்: குபேரன் படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வதாலும், வடக்கு நோக்கி குபேர திசையை வணங்குவதாலும் விரும்பிய பொருளாதாரம் பெற்று நல் வழியில் வாழலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன் | சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21 | அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
| முழுமையான மாத பலன்களுக்கு > கடகம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
சிம்மம் - மகம்: இந்த மாதம் சக வியாபாரிகளால் தொந்தரவு ஏற்படும். சேமிப்பிற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் வருமானம் அதிகமாக வரும். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
பூரம்: இந்த மாதம் தங்களுக்கு உள்ள வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அது உங்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்து விடலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் புதிய வீடு, வாகனம் போன்றவைகளில் அதிக லாபத்தை காணலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் சரியான பேச்சுவார்த்தைகள் மூலம் லாபம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெரியோர் ஆசி கிட்டும்.
பரிகாரம்: பால வடிவ முருகனை வழிபாடு செய்வதால் குழந்தையைப் போல மன அமைதி நிறைந்த வாழ்க்கை உண்டாகும். சிவப்பு நிற மலர்களை முருகனுக்கு சாற்றி வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 22, 23 | அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16
| முழுமையான மாத பலன்களுக்கு > சிம்மம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
கன்னி - உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.புதிய வாகனம் வாங்கும் எண்ணமிருப்பின் அதை தள்ளி வையுங்கள்.
அஸ்தம்: இந்த மாதம் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குழப்பத்தின் காரணமாக முடிவுகள் தவறாக அமைந்து விடலாம். ஆதலால் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்வது மிகவும் உத்தமம்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த மாதம் சிலருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தக்க நேரத்தில் உணவு உண்ண முடியாமல் அதனால் வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளுக்கு மனக்குழப்பங்கள் ஏற்படக் கூடும்.
பரிகாரம்: சூரிய பகவானுக்கு உள்ள மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்வதாலும், குலதெய்வத்தை தகுந்த முறையில் வழிபடுவதாலும் அனுகூல பலன்கள் பெற்று அமைதியான வாழ்க்கை கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 24, 25 | அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18
| முழுமையான மாத பலன்களுக்கு > கன்னி ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
துலாம் - சித்திரை 3, 4 பாதம்: இந்த மாதம் செய்யும் காரியங்கள் அனைத்திலுமே திருப்தியும், வெற்றியும் காணப்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தால் அனைவருடனும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு எடுங்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.
சுவாதி: இந்த மாதம் இனம்புரியாத கவலை மனதில் குடிகொண்டிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாங்கள் இப்போது உள்ள வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். எதிலும் நிதானத்துடன் முடிவு எடுங்கள்.
விசாகம் 1, 2, 3ம் பாதம்: இந்த மாதம் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். சகோதர சகோதரிகள் யாரேனும் ஒருவர் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை பரிசாக அளிப்பார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமையும்.
பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் அனுகூலமான பலன்கள் பெற்று புகழான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 26, 27 | அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21
| முழுமையான மாத பலன்களுக்கு > துலாம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
விருச்சிகம் - விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் உற்றார் உறவினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தி அடையும். புதிய நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அனுஷம்: இந்த மாதம் வியாபாரிகள் புதுவாடிக்கையாளர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். ஏனெனில் வசூலாவதில் சிக்கல்கள் ஏற்படக் கூடும். மற்றபடி பிரச்சினைகள் ஏதும் வராது. பெற்றோருக்கு பெருமை தேடித் தருவீர்கள்.
கேட்டை: இந்த மாதம் சுபவிரயங்கள் உண்டாகலாம். உங்களுக்கு சம்மந்தமான விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். எதிலும் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள நன்மை நடக்கும்.
பரிகாரம்: செவ்வரளி மாலை சாற்றி செவ்வாய்தோறும் முருகனை வழிபடவும். நடராஜர் சன்னதியில் உள்ள பதஞ்சலி மகரிஷியை உரிய முறையில் வழிபடுவதால் நலமுடன் வாழலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 28, 29, 30 | அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23
| முழுமையான மாத பலன்களுக்கு > விருச்சிகம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
தனுசு - மூலம்: இந்த மாதம் பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும்.
பூராடம்: இந்த மாதம் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக் கூடும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் நிதி நிலைமை திருப்தி தரும். செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை சுலபமாக சமாளித்து விட முடியும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை.
பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சங்கரநாராயணர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதால் சகல நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31 | அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25
| முழுமையான மாத பலன்களுக்கு > தனுசு ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
மகரம் - உத்திராடம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது.
திருவோணம்: இந்த மாதம் சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது.
அவிட்டம் 1,2 பாதம்: இந்த மாதம் பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். விரக்தி மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
பரிகாரம்: அக்னி வீரபத்திரர், அகோர வீர பத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு வெண்ணெய் சார்த்தி வழிபடுவதால் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனி | சந்திராஷ்டம தினங்கள்: 6, 7 | அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27
| முழுமையான மாத பலன்களுக்கு > மகரம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
கும்பம் - அவிட்டம் 3, 4 பாதம்: இந்த மாதம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம்.
சதயம்: இந்த மாதம் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதம்: இந்த மாதம் நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள்.
பரிகாரம்: ஐயப்பன், அய்யனார், சாஸ்தா ஆகிய தெய்வங்களை தகுந்த முறையில் வழிபாடு செய்வதினால் நற்பலன் உண்டாகும். கிருத்திகை தோறும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு,சனி | சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10 | அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 28, 29, 30
| முழுமையான மாத பலன்களுக்கு > கும்பம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
மீனம் - பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள்.
உத்திரட்டாதி: இந்த மாதம் அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.
ரேவதி: இந்த மாதம் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது.
பரிகாரம்: ராமபிரானை வழிபாடு செய்வதாலும் அவரது நற்செயல்களை பின்பற்றி நடப்பதாலும், ராம நாமத்தை உச்சரிப்பதாலும் இன்னல்கள் இல்லாத இனிய வாழ்வை பெறலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி | சந்திராஷ்டம தினங்கள்: 11, 12 | அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31
| முழுமையான மாத பலன்களுக்கு > மீனம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் - முழுமையாக | 2023
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago