கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் புதன், சூரியன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 09-03-2023 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-03-2023 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14-03-2023 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-03-2023 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 29-03-2023 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: தகுதிக்கேற்ப வாழ்ககை நடத்தி கிடைத்ததை பெரிதென எண்ணி வாழ்ந்திடும் கும்ப ராசி அன்பர்களே... இந்த மாதம் உங்கள் மனதிலும், செயலிலும் உற்சாகம் நிறைந்திருக்கும். மனதில் தைரியமும், உற்சாகமும் உண்டாகும். வீடு, வாகன வகைகளில் முன்னேற்றமான நற்பலன்கள் உண்டாகும். ஆசாபாச செயல்கள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருப்பதாலும், லாகிரி வஸ்துகளை ஒதுக்கி வைப்பதாலும் மட்டுமே ஆரோக்கிய உடல்நலத்தை பெற முடியும்.
குடும்பத்தில் தந்தை மற்றும் சகோதரர் வகையில் கடந்த காலங்களில் உங்களுக்குள் இருந்த மனவேற்றுமைகளை விலகுவதற்கான மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள் ஏற்படும். பூர்வ புண்ணிய சொத்துகளில் வம்பு வழக்கு ஏதுமிருந்தால் அனுகூலமான தீர்வு உண்டாகும். விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் நலம் கிடைக்கும். அடுத்தவர்களின் நட்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
» மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மார்ச் 2 - 8
» கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மார்ச் 2 - 8
உத்தியோகஸ்தர்கள் நல்ல முறையில் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். திருப்தியான மனப்போக்கு உண்டாகும். அடுத்தவர்களின் கருத்துக்கு இடம் கொடாமல் நீங்களே முடிவெடுத்துக் கொண்டால் பிரச்சினைகளுக்கு இடமே இல்லை. மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். பதவி உயர்வை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான தகவல் கிடைக்கும்.
தொழிலதிபர்கள் தொழிலில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். ஆதாயத்தின் ஒருபகுதியை அறப்பணிகளுக்கு செலவிடும் நிலைமைகள் உண்டாகி உங்கள் மனதை நல்வழிப்படுத்தும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு தொழிலில் புதிய ஆதாயத்தை ஏற்படுத்தும். தொழிலில் உங்களை புறக்கணித்தவர்கள் அண்டி வருவார்கள். நன்மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.
பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், அதிகபட்ச வேலைகளை தானே விரும்பி ஏற்றுக் கொண்டு செயல்படுவர். குடும்பத்தவரின் தகுந்த ஒத்துழைப்பு ஊக்கம் பெறச் செய்யும். ஆபரணங்களை தகுந்த முறையில் பாதுகாப்புடன் அணிந்து செல்வது சிரமங்கள் வராது தவிர்க்கும். அதே நேரம், ஆடை, ஆபரணங்கள் ஏராளமாக சேரும்.
கலைஞர்கள் அனுகூலமான தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மதிப்பும், மரியாதையும் கிட்டும். பல மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறலாம். உங்களுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பலவழிகளிலிருந்தும் பண வரவுகள் வரலாம். முக்கியமான நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அளிக்கும்.
அரசியல்வாதிகள் மூத்த தலைவர் ஒருவரால் நீங்கள் புகழப்படுவீர்கள். உடனிருப்போரின் தகுந்த ஒத்துழைப்பை பெற முயற்சிப்பீர்கள். மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள் ஆதாயம் கிட்டும்.
மாணவர்கள் தங்கள் படிப்பில் தேவையான கவனம் செலுத்துவதால் அனைவரிடமும் நற்பெயர் பெறமுடியும். தந்தை மற்றும் சகோதர, சகோதர வகையில் அன்பான சூழ்நிலை உருவாகும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பாகி விடுவீர்கள். எச்சரிக்கை தேவை.
அவிட்டம் 3, 4 பாதம்: இந்த மாதம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம்.
சதயம்: இந்த மாதம் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதம்: இந்த மாதம் நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள்.
பரிகாரம்: ஐயப்பன், அய்யனார், சாஸ்தா ஆகிய தெய்வங்களை தகுந்த முறையில் வழிபாடு செய்வதினால் நற்பலன் உண்டாகும். கிருத்திகை தோறும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு,சனி | சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10 | அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 28, 29, 30
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago