மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சூரியன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 09-03-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-03-2023 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14-03-2023 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 15-03-2023 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 29-03-2023அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: முன்யோசனையுடன் செயல்பட்டு துன்பங்களை விலக்கி வைத்து வெற்றிகள் பெறும் மிதுன ராசி அன்பர்களே... இந்த மாதம் ஆரோக்கியம் சீராகவும், ஆயுள் பலம் கூடுவதற்கான கிரக நிலையும் அமைய பெற்றுள்ளீர்கள். நீங்கள் பிறருக்கு சொல்லும் நல்ல வார்த்தைகள் அப்படியே பலித்து விடும். தந்தை பற்றிய எண்ணமும் அவர்தம் நற்செயல்களும் அடிக்கடி நினைவுக்கு வந்து உங்களை நல்வழிப்படுத்தும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும்.
குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் பெரிய அளவில் பாதிப்பு இராது. உங்கள் மனதில் எதிரி என்ற நிலையில் இடம் பெற்றவர் செய்ய நினைத்த கெடுதல்கள் தூள் தூளாகும். வாழ்க்கைத் துணையின் பேச்சால் அவ்வப்போது படபடப்பு போன்ற விஷயங்கள் வந்து போகும். பிள்ளைகளால் இருந்து வந்த மனக்கசப்பு மாறி நிம்மதி நிலை உண்டாகும்.
» மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மார்ச் 2 - 8
» கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மார்ச் 2 - 8
உத்தியோகஸ்தர்கள் மனைவி வழியில் சில ஆதாயங்களை பெற முடியும். காசோலை சம்மந்தமான விசயங்களில் கவனம் தேவை. முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். உடன்பணிபுரிவோரை அனுசரித்து போவது சிறந்தது. யாரையும் நம்பி படித்து பார்க்காமல் கையெழுத்து போட வேண்டாம். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு வெற்றி காணுங்கள்.
தொழிலதிபர்கள் வேலையில் அடுத்தவர்களை நம்பாது தானே காரியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய காலகட்டம். வங்கிகளிலிடமிருந்து கடனுதவி பெற்று தொழில் சம்மந்தமான கடன்கள் அடையும். பணியாளர்களுக்கு தகுந்த ஊதியத்தை அளித்து நல்லபெயரை சம்பாதிப்பீர்கள். உடல் நலனிலும் அக்கறை தேவை.
பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிக்கும் பெண்கள் உறவினர்களின் சந்தோஷ வருகையால் உற்சாகமாக செயல்படுவார்கள். ஆபரணச் சேர்க்கை அனுகூலமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியில் நல்ல கவனம் செலுத்தி உயரதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.
கலைஞர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வெற்றி வாய்ப்புகள் கடனிலிருந்து விடுபட வாய்ப்பு அனைத்தும் கிட்டும். நல்லகாரியங்கள் அனைத்துக்கும் அனுபவசாலிகளின் ஆலோசனைப் படி நடந்து கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகள் முக்கிய முடிவுகளை மூத்த அரசியல்வாதிகளின் ஆலோசனைப்படி எடுப்பது உத்தமம். சங்கடங்கள் வந்து விலகும். நேர்மையாக நடந்து நல்ல பெயரை எடுப்பீர்கள். சொத்து, பத்திர விவகாரங்களில் படித்து பார்த்து பின் கையெழுத்திடவும்.
மாணவர்கள் தங்கள் படிப்பில் சீரான கவனம் செலுத்தி தேர்ச்சி பெற்று ஆசிரியரிடம் நற்பெயர் பெறுவார்கள். தந்தை மகன் உறவு நிலைகளில் நல்ல முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது சில பிரச்சினைகளிலிருந்து உங்களை காப்பாற்றும்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். கணவன், மனைவி ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து போவது பிரச்சினைகளை தவிர்க்கும். தெய்வத்தை வழிபட நன்மைகள் நடக்கும்.
திருவாதிரை: இந்த மாதம் சிறு தடங்கல்கள் வரலாம். நன்மைகளை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். வெளிநாடு செல்ல விரும்புவர்கள் சிறிது காலம் அதை ஒத்திப் போடுவது நல்லது. பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டிய கால கட்டம்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்குத் தக்க வருமானமும், வெகுமதியும் கிடைக்கும். நல்லோர் சிலரை சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் காக்கைக்கு அன்னமிட்டு வர வெற்றி கிட்டும். எள் தீபமேற்றி சனி பகவானை வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 17, 18 | அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago