மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் புதன், சூரியன் - விரைய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 09-03-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-03-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14-03-2023 அன்று செவ்வாய் பகவான் தன வாக்குகுடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-03-2023 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 29-03-2023அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: சிந்தனையில் புதுமையுடனும், செயலில் நேர்மையுடனும் வாழ்ந்து வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே... இந்த மாதம் உங்களின் கல்வியறிவு பயனுள்ள விஷயத்தில் பிரகாசமாக ஒளிவிட்டு உங்களின் வாழ்க்கை முறையில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்கித் தரும். நற்காரியங்களை நடத்துவதற்கு தேவையான பொருளாதாரம் உறவினர்கள் வகையிலிருந்தும், செய்தொழில் லாபத்திலிருந்தும் நிறைவாக கிடைக்கும். கால தாமதமான செயல்திட்டங்களை புதிய உத்வேகத்துடன் செயல்படுத்தி முன்னேற்றம் பெறுவீர்கள்.
குடும்பத்தில் தாய்மாமன் வகை உறவினர்களுடன் மனக்கசப்பு வராத வண்ணம் நல்லமுறையில் பழக வேண்டும். தாயின் அன்பைப் பெறுவதால் குடும்பத்தில் மகிழ்வு உண்டாகும். குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா செல்ல காலம் கணிந்துள்ளது. நண்பர்கள் நல்ல அறிவுரைகள் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.
» மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மார்ச் 2 - 8
» கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மார்ச் 2 - 8
உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்கு உட்படுவீர்கள். கடுமையான பணிசுமைக்கு ஆளாக நேரிடும். யாரிடமும் யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். முடிந்து போனது என்று நினைத்த தண்டச் செலவுகள் புதிய கோணத்தில் உருவெடுக்கும். கவனமுடன் செயல்பட்டு விரயத்தை தவிர்க்கலாம்.
தொழிலதிபர்கள் தொழில் வகையில் கூடுதல் வருமானம் கிடைக்க உங்கள் சகோதரர்கள் தகுந்த உதவி புரிவார்கள். நண்பர்களும், ஆன்மீக அருள் பெற்றவர்களும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் பெறும் வகையிலான உபாயங்களை சொல்லித் தருவார்கள். கடன், வழக்கு, எதிரிகள் ஆகிய பிரச்சினைகளிலிருந்து விடுபட வேண்டிய கால கட்டம் நெருங்கியுள்ளது.
பெண்கள், குடும்ப நிர்வாகப் பொறுப்பிலுள்ள பெண்கள் நிறைய நற்காரியங்களில் ஈடுபட்டு கணவரிடமும், பிள்ளைகளிடமும் நல்ல அன்பைப் பெறுவீர்கள். பழைய ஆபரணங்களை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் முழுமனதுடன் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
கலைஞர்கள் ஆன்மிகச் சொற்பொழிவாளர்களின் ஆலோசனைப் படி நடந்து வெற்றியைப் பெறலாம். யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது சிறந்தது. அரசியல்வாதிகள் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம். மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார்கள்.
மாணவர்கள் முழுக்கவனத்துடன் செயல்பட்டு நல்லதரத்தை எட்டி பிடிப்பார்கள். ஆசிரியர்களின் நல்ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
அஸ்வினி: இந்த மாதம் நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். அதனால் மனநிறைவைத் தரும். உடல் உபாதைகள் உஷ்ணம் சம்மந்தப் பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
பரணி: இந்த மாதம் வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு நிறுவன மாற்றமோ, அல்லது ஊர் மாற்றமோ ஏற்படக் கூடும். அதனால் உங்களுக்கு நன்மையே ஏற்படும். வருமானமும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் கடின உழைப்பு இருக்கும். அதற்கான முன்னேற்றம் இருப்பதால் அது பற்றி கவலைப்பட வேண்டி இருக்காது. மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு நல்லபடியாக இருக்கும். கடன் வாங்க வேண்டி வரலாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் தீபமேற்றி வழிபாடு செய்வதால் விரயச்செலவுகள் இல்லாமல் விரும்பிய செலவுகள் செய்யும் நல்வாய்ப்பை பெறலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 13, 14 | அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago