சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 - விருச்சிகம் ராசியினருக்கு எப்படி?

By செய்திப்பிரிவு

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) மனதில் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசும் நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள். மற்றவர்களை உடனே நம்பி உதவி செய்து, தர்மசங்கடத்தில் சிக்கிக் கொள்வீர்கள். சட்ட திட்டங்களை சரியாக பின்பற்றும் நீங்கள், வரம்பு மீறி பழகமாட்டீர்கள். இலவசமாக எதையும் பெறமாட்டீர்கள்.

இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை பெறுவீர்கள். சனி ஆட்சிப் பெற்று அமர்வதால் குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கிக் கொள்வீர்கள். எந்த விஷயத்திலும் கூட்டு வேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது.

அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும். அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிள்ளைகள் கொஞ்சம் செலவு வைப்பார்கள். அவர்களின் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புது பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும் - சஷ்டமாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வெகுநாட்களாக வராமலிருந்த பணம் இப்போது கைக்கு வரும். பெரிய பதவிகள் தேடி வரும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் புதிய நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். உங்கள் பேச்சில் பக்குவம் தெரியும். லோன் மூலம் புது வாகனம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல இப்போது விசா கிடைக்கும். அடிப்படை வசதிகள் பெருகும்.

உங்கள் பூர்வ புண்யாதிபதியும் - தனாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் தொட்ட காரியம் துலங்கும். பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள்.

இல்லத்தரசிகளே! உடல் எடையை குறைக்க பட்டினி கிடக்காதீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! ஓவர் டைமிலிருந்து விடுபடுவீர்கள். சக ஊழியர்களின் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் வலையில் இப்போது சிக்கிக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கல்யாணம் தடைபட்டு முடியும். மாணவ-மாணவிகளே! விளையாட்டைக் குறைத்து படிப்பில் அக்கறை செலுத்துங்கள். தெரியாதவற்றை வகுப்பாசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அலட்சியப்போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் இனி வேண்டாம்.

வியாபாரிகளே, பண விஷயத்தில் கறாராக இருங்கள். போட்டிகள் அதிகரிக்கத்தான் செய்யும். வாடிக்கையாளர்களை கனிவாக நடத்துங்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். வேலையாட்களை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே, சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினி துறையினருக்கு பார்வை கோளாறு, தசைப் பிடிப்பு நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும்.

இந்த சனி மாற்றம் வேலைச்சுமையையும், செலவுகளையும் அவ்வப்போது தந்து அலைக் கழித்தாலும் தொலை நோக்குச் சிந்தனையால் துவளாமல் வெற்றி பெறவைக்கும்.

பரிகாரம்: கஞ்சனூர் அருகிலுள்ள திருக்கோடிக் காவலூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபால சனீஸ்வரரை அஸ்வினி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கும்.

மற்ற ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023: மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனசு | மகரம் | கும்பம் | மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்