சனிப்பெயர்ச்சி பொதுப்பலன் - ஜன.17, 2023 முதல் மார்ச் 29, 2025 வரை | ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

என்ன ஜோதிடரே! வாரப் பெயர்ச்சி, வருடப் பெயர்ச்சி, வக்ரப் பெயர்ச்சி என்று கிரகப் பெயர்ச்சிகளோடு நீங்களும் ஓடிக்கொண்டே இருந்தீர்களா? சரி! பகவான் எப்போது பெயர்ச்சி ஆகிறார்? கோயிலில் இருக்கும் இறைவனா அல்லது கோள்களில் இருக்கும் பகவானா? திருவிழா நேரத்தில் பகவான் (சுவாமி) பெயர்ச்சியாகி திருவீதி உலா வருவது எல்லோருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். திருநள்ளாறுக்காரர் எப்போது, என்று இடம் பெயருகிறார் என்று கேட்க வந்தேன்!

சுற்றி வளைக்காமல் சனிப்பெயர்ச்சி எப்போது என்று நேரடியாக கேட்கலாம் அல்லவா? எல்லாம் ஒரு பயம் தான்! அவரைப் பார்த்து பயமா! இல்லை.. ஒரு மரியாதை தான். கடந்த காலங்களில் பட்டதை நினைத்துப் பார்த்தால் இப்பவும் மனது படபடக்குது. அதான். அளவுக்கு அதிகமாக ஆசைப்படாமல் அடுத்தவன் சொத்தை அபகரிக்காமல், வாரி அடிச்சு வழிச்சி சுரண்டி சாப்பிடாமல் கடவுள் கொடுத்த காற்று, நீர், நிலம், காசு பணமெல்லாம் பிறரும் அனுபவிக்கட்டும். நம் வேலையை ஒழுங்காக பார்த்துக் கொண்டு விட்டுக் கொடுத்துப் போனால்.. அவர் ஒதுங்கிப் போய் விடுவார்.

வரும் 17.01.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி 4 நிமிடத்தில் கும்ப ராசிக்குள் சனிபகவான் அமர்கிறார். நிகழும் சுபகிருது வருடம் தை 3-ம் நாள் கிருஷ்ணபட்சத்து தசமி திதி, விசாகம் நட்சத்திரம், கண்டம் நாமயோகத்தில், பவம் நாமகரணத்தில், நேத்திரம், ஜுவனம் நிறைந்த மந்தயோகத்தில் காணும் பொங்கல் திருநாளில் நம்மைக் காப்பதற்காக மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் குடி பெயர்கிறார். வாக்கியப் பஞ்சாங்கப்படி 29.03.2023 அன்று மாறுகிறார்.

கடந்த இரண்டரை வருடகாலமாக சர வீடான மகர ராசியில் அமர்ந்து எல்லோரையும் சங்கடப்படுத்தி, சஞ்சலப்படுத்திப் பார்த்தார் சனிபகவான். காலப்புருஷ தத்துவப்படி கர்ம ஸ்தானமாகிய 10-ம் வீட்டில் இதுவரை இருந்து கொண்டு அவரவர் செய்த பாவ புண்ணியத்துக்கு, கர்மாவுக்குத் தகுந்தாற் போல் பலாபலன்களை தந்தார்.

இப்போது சனிபகவான் அவரது மூலத் திரிகோண வீடாகிய கும்பத்தில் மனதுக்குப் பிடித்த லாப வீட்டில் அமர்வதால் அனைவருக்கும், அனைத்து ராசியினருக்கும் பாரபட்சமின்றி யோகப் பலன்களை அள்ளி வீசுவார். அமெரிக்கா, சீன நாட்டை விட இந்தியா வாகன உற்பத்தியில் முன்னேற்றம் அடையும். மக்கள் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெறுவார்கள். 4ஜி நெட்வொர்க்கைவிட 5 ஜி அதிவேக நெட்வொர்க் சேவை கிராமம், முதல் இந்தியாவின் கடைக்கோடி நகரம் வரை பரவும்.

இதுவரை நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு கல் நெஞ்சத்துடன் இருந்த சனிபகவான் இப்போது கை ஏந்தி, கண் கசக்கி, கண்ணீர் சிந்தி கதறுபவர்களை எல்லாம் கரை ஏற்ற மனம் கரைந்து வருகிறார். இனி தனிமனித வருமானம் உயரும். மக்கள் மனதில் இருந்த பயம் விலகும். உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஆசை வரும், சொந்தத் தொழில் தொடங்குவோர் அதிகமாவார்கள். “எங்க அப்பா கஷ்டப்பட்டு ஆரம்பிச்சு நடத்துன இந்த தொழிலை இந்த கடையை நான் இன்னும் பெருசா எடுத்து நடத்தலாம்னு இருக்கேன்” என்று முயற்சிக்கும் சிலரின் குடும்பத் தொழில் நல்லா வளர வாய்ப்பு இருக்கு.

பூமி விலை உயரும். ரியல் எஸ்டேட் லாபம் தரும். ஆர்க்கானிக் விவசாயம் பிரபலமாகும். ஏரி, குளம் மற்றும் கோயில் நிலம் ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும். நீதிபதிகளின் நியாயமான கேள்விகளால் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அதிர்வார்கள். நிதிக்கும், நீதிக்கும் இடையே கைகலப்பு வரும். இந்தியாவின் பொருளாதாரம் கீழே போய் மேலே வரும். தங்கத்தின் விலை உச்சம் தொடும். சனிபகவான் மேஷத்தைப் பார்ப்பதால் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகமாகும். அக்டோபர் 2023 வரை வைரஸ் தொற்று அதிகம் பரவும். தலையை மறைக்கும் உடைக்கு சர்ச்சை இருக்கும். போலி சொத்துப் பத்திரப் பதிவுகள், பினாமி சொத்துகள், கடத்தல் தங்கங்கள் பிடிபடும். போதைப் பொருட்கள் பறிமுதலாகும்.

கட்டுமானப் பொருட்களான கம்பி, சிமெண்ட், மணல் விலை கட்டுக்கடங்காமல் உயரும். மருந்து விலை குறையும். கெமிக்கல் நிறுவனங்கள் அதிகமாகும். சினிமா, விளையாட்டுத்துறை வளரும். சின்ன பட்ஜெட் படங்கள் பெரிய வசூலைப் பார்க்கும். பாட்டி கதை, ராஜா கதை, டீக்கடை பெஞ்ச் கதைகள் சினிமாவாகி சில்லரையை குவிக்கும். நிறைய நடிகர், நடிகைகளுக்கு கல்யாணம் நடக்கும். பிரிவும் உண்டு.

சிம்மத்தை சனி பார்ப்பதால் குறை பிரசவம் அதிகமாகும். ஆண் குழந்தை பிறப்பு உயரும். சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி தாவுவர். கோட்டை கட்சிகளில் ஓட்டை விழும். அரசு ஊழியர்கள் ஆதாயம் அடைவர். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். புது கட்சிகள் உதயமாகும். வழிபாட்டுத் தலங்கள் வலுவடையும், கும்பாபிஷேகங்கள் அதிகமாகும்.

விருச்சிகத்தை சனி பார்ப்பதால் மக்களிடையே சேமிப்பு அதிகரிக்கும். ஆனால் சாலை விபத்துகள் கூடும். சுற்றுலாத்துறை சூடு பிடிக்கும். இளைஞர்களை விட முதியோருக்கு வேலை வாய்ப்பு பெருகும். மின்சார உற்பத்திக்கான நிலக்கரி சுரங்கங்கள், தங்கச் சுரங்கங்கள் கண்டறியப்படும். சிலருக்கு புதையல் கிடைக்கும்.

கும்பச் சனி மக்கள் மனதில் குதூகலத்தையும், தெளிவையும் தருவதுடன் வருங்காலத்துக்கான வழியையும் காட்டிக் கொடுக்கும்.

மற்ற ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023: மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனசு | மகரம் | கும்பம் | மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்