மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை: ராசியில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - சப்தம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் எத்தனை தடை வந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காண்பீர்கள். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
» விழிப்புணர்வு குறும்படம்: வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்த யோகி பாபு
» குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை: பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் ஆலோசனை
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.
***********
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் திட்டமிடாவிட்டால் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.
பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
***********
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை: ராசியில் செவ்வாய்(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 28-11-2022 அன்று புதன் பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் எல்லாவற்றிலும் இருந்து வந்த மனகவலையை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். புதிய நபர்களின்
அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும். படிப்பின் நிமித்தம் வெளியூர் பிரயாணங்கள் ஏற்படும்.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாத வர்களுக்கு திருமணம் கைகூடும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago