ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: இம்மாதம் 3-ம் தேதி புதன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9- ம் தேதி செவ்வாய் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 18- ம் தேதி சூர்யன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 20-ம் தேதி சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 23-ம் தேதி புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: நேரத்தை உயிருக்கு சமமாக மதிக்கும் ரிஷப ராசி அன்பர்களே... நீங்கள் தனியாக இருக்க விரும்பாதவர்கள். இந்தமாதம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும்.
» 108 வைணவ திவ்ய தேச உலா - 1. ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 2. உறையூர் அழகிய மணவாளர் பெருமாள்
குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம்.
பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன்நிறுத்தி தான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்களே வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டுகட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.
கார்த்திகை: இந்த மாதம் புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை வாங்கிக் குவிப்பீர். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள்.
ரோகினி: இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை உகந்தவர்களாக பழகுவார்கள். வரவுக்குத் தகுந்த செலவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வரி செலுத்துவதில் முறைகளைப் பின்பற்றுங்கள். வேலையாட்கள் சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
மிருகசீரிஷம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர பாவங்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago