மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: இம்மாதம் 3-ம் தேதி புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 9-ம் தேதி செவ்வாய் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 18-ம் தேதி சூர்யன் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 20-ம் தேதி சுக்கிர பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 23-ம் தேதி புதன் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: எடுத்த முடிவில் பின்வாங்காத, அதே வேளையில் கருத்தும் கண்ணுமாக இருக்கும் மேஷ ராசி அன்பர்களே... இந்த மாதம் மற்றவர்களுடன் இருந்த பகை மாறும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தர்மசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
» 108 வைணவ திவ்ய தேச உலா - 1. ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 2. உறையூர் அழகிய மணவாளர் பெருமாள்
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. அரசியல்துறையினருக்கு வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்.
அஸ்வினி: இந்தமாதம் தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே நீங்கள் எடுத்த காரியங்கள் முடியும். வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது.
பரணி: இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். நெருக்கடியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.
கார்த்திகை: இந்த மாதம் மற்றவர்கள்மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 1, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago