மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.1 - 7

By செய்திப்பிரிவு

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) கிரகநிலை - ராசியில் சனி(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

1ம் தேதி - சுக்கிர பகவான் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும். பணவரத்து இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடி வரும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நிவர்த்தியாகி உங்கள் சொற்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

பெண்கள் தடைபட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

பரிகாரம்: திங்கள்கிழமை அன்று விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றி வர கடன் தொல்லை குறையும். காரிய தடை நீங்கும்.

***********

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.

1ம் தேதி - சுக்கிர பகவான் - சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் மனத்தெம்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் லாபத்திற்கு பஞ்சமிருக்காது. வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்க தாமதமானாலும் கட்டாயம் கிடைக்கும். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானமாக இருப்பது நல்லது.

அலுவலகத்தில் நல்ல பெயர் கிட்டும். மேலிடத்திலிருந்து அதிகமான சுமைகளைத் தருவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். நண்பர்கள் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் வேகம் பிறக்கும். பெண்களுக்கு மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை அதிகரிக்கும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்க குடும்பகஷ்டங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

***********

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் குரு(வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.

1ம் தேதி - சுக்கிர பகவான் - ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தின் மூலம் நன்மைகள் கிடைக்கும். தனரீதியில் எல்லாவகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும்.

உங்கள் நிறுவன பங்குகள் உயரும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு கவுரவம் அளிப்பார்கள். மேலிடத்திலிருந்து அனுகூலமான விஷயங்கள் நடக்கும். குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். மன வருத்தம் நீங்கும். நிலம் வீடு சம்பந்தமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

பெண்களுக்கு நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். கலைத்துறையினர் வெளிநாட்டு பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். அரசியல்வாதிகளுக்கு வார்த்தையின் மதிப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: அம்மனை பாடல்கள் பாடி வழிபட துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ செப். 1- 7 வரை

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்