ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் புத, ராஹூ, சுக்ரன் என கிரகநிலை உள்ளது. கிரகமாற்றங்கள்: 06-06-2022 அன்று பகல் 01:59 மணிக்கு புதன் பகவான் அயன சயன் போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 18-06-2022 அன்று மாலை 05:55 மணிக்கு சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 25-06-2022 அன்று இரவு 12:24 மணிக்கு புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-06-2022 அன்று விடியற்காலை 05:32 மணிக்கு செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள் :
மனம் அது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பதற்கேற்ப மனதினை தூய்மையாக வைத்திருக்கும் ரிஷப ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுபச்செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த கலக்கம் நீங்கும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமந்த சுமை மாறும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சண்டை சச்சரவுகள் அகலும். கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் இருந்த உடல் சோர்வு நீங்கும். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணி உயர்வு, பதவி உயர்வு கிட்டும்.
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். உறவினர்கள், நண்பர்கள், பிள்ளைகள் என்று அனைவரும் உங்களுக்கு ஆதரவுக்கரம் கொடுப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம். சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும்.
பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.
கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.
அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.
மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
கார்த்திகை:
» மேஷ ராசி அன்பர்களே! ஜூன் மாத பலன்கள் - காரியத்தில் பலன்; தேக ஆரோக்கியம்; வேலையில் நற்பெயர்!
இந்த மாதம் எந்தக் காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். நட்சத்திரநாதன் சூரியன் சஞ்சாரத்தால் வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்.
ரோகிணி:
இந்த மாதம் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும்போது கவனமாக இருப்பது நல்லது. குருவின் பார்வை ராசியின் மீது படிவதால் உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
மிருகசீரிஷம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குப் பின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.
பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி லட்சுமியை வழிபட கடன் பிரச்சினை தீரும். செல்வநிலை உயரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 8, 9, 10
------------------------------------------
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago