- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரகநிலை: ராசியில் குரு, சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சூர்யன், சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் (வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: மே 04 - அன்று புதபகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார். மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார். மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார். மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்:
அடுத்தவரை பயன்படுத்தி பல காரியங்களை சாதிக்கும் திறமை உடைய மீன ராசியினரே! நீங்கள் பொது வாழ்க்கையில் புகழ்பெறுவீர்கள். இந்த மாதம் செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவன மாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.
தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப் படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாக லாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக் கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதான மாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.
மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்கு வீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பூரட்டாதி:
இந்த மாதம் வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலிடத்திடம் இருந்து பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர் மத்தியில் மதிப்பு கூடும்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும். வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.
ரேவதி:
இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். நல்ல விஷயங்கள் நிகழும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் தொல்லை ஒழியும். தம்பதிகளிடையே அன்பு மலரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை சேர்ப்பீர்கள். தடைப்பட்ட திருமணம் கைகூடி வரும். மனப்பிரச்சினைகள் விலகும்.
பரிகாரம்: குலதெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக்கும். செல்வம் மற்றும்செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே 14, 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: மே 25, 26
*****************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago