- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரக நிலை: ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் ராகு, சூர்யன், சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் (வ) - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றம்: மே 04 - அன்று புதபகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார். மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார். மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார். மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்:
சொந்த உழைப்பினால் உயரும் திறமை உடைய மகர ராசியினரே! உங்களுக்கு பிறரின் உதவிகள் கிடைக்கும். இந்த மாதம் ஆக்கபூர்வமான யோசனைகளைத் தரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர் கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப்பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.
குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமுகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல்நிலையில் கவனம் தேவை.
பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
உத்திராடம்:
இந்த மாதம் குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல்திறன் அதிகரிக்கும். சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சினை வரலாம்.
திருவோணம்:
இந்த மாதம் எந்தச் சூழ்நிலையிலும் பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவற்றை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணத்திற்கு நல்ல வரனாக அமையும். தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும்.
அவிட்டம்:
இந்த மாதம் வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். முதலீடு செய்வதற்கு உண்டான பணவசதி வந்து சேரும். கடன் தொல்லை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும்.
பரிகாரம்: துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: மே 21, 22
****************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago