- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) - கிரக நிலை: ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, சூர்யன், சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றம்: மே 04 - அன்று புதபகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார். மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார். மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார். மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்:
சொந்த முயற்சியில் முன்னுக்கு வரக் கூடிய ஆற்றல் உடைய துலா ராசியினரே! இந்த மாதம் திடீர் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக் கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத் தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்ச லுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.
குடும்பத்தில் வீண் பிரச்சினை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது ஆறுதலைத் தரும்.
பெண்களுக்கு கோபத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும்.
மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுர்யமாகப் பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது.
சித்திரை:
இந்த மாதம் கடன் பிரச்சினை தீரும். பணவரத்து அதிகரிக்கும். எதையும் நிர்ணயிக்கும் திறன் குறையலாம். பணவரத்து தாமதப்படும். கையிருப்பு கரையும். மற்றவர்களுக்காக உதவி செய்யும் போது வீண்பழிச்சொல் கேட்க நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம்.
ஸ்வாதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்வது நல்ல பலன்களைத் தரும். பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். திசைபுக்தி அனுகூலமிருந்தால் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும்.
விசாகம்:
இந்த மாதம் பரம்பரைச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். எதிர்பாலினத்தவரிடம் மிகவும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் பழகுங்கள். அவர்களால் சில பிரச்சினைகள் எழலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் இழுபறியான நிலை காணப்படும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே 02, 03, 04, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: மே 14, 15, 16
******************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 min ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago