ரேவதி: கிரகநிலை: ராகு பகவான் உங்களுடைய நான்காவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்களுடைய பதினேழாவது நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார். இந்தப் பெயர்ச்சியில் பணவரத்து அதிகரிக்கும். அறிவுத் திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை.
அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாகப் பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும்போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.
உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும்.
கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம் இது. பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
மதிப்பெண்கள்: 72% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
********
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago