- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் புதன், சனி, செவ்வாய், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சூர்யன் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.
» மார்ச் மாத பலன்கள்; மிதுன ராசி அன்பர்களே! கவலை தீரும்; மந்த நிலை மாறும்; வருமானம் வந்துசேரும்!
» மார்ச் மாத பலன்கள்; மேஷ ராசி அன்பர்களே! பண வரவு உண்டு; புதிய பொறுப்பு; வெளியூர் பயணம்!
கிரக மாற்றங்கள்:
01-03-2022 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-03-2022 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-03-2022 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-03-2022 அன்று கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-03-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
கவலைகளை வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் கடக ராசிக்காரர்களே!
இந்த மாதம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரைப் பற்றி எந்தப் பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.
தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தக்க நேரத்தில் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலைப் பளு ஆகியவை இருக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். ஆனாலும் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணியப் பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.
பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரைப் பற்றி எந்தப் பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.
கலைத்துறையினர் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
அரசியல்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். தொண்டர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும்.
புனர்பூசம் - 4 ம் பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.
பூசம்:
இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
ஆயில்யம்:
இந்த மாதம் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும்.
பரிகாரம்: சிவன் கோயிலுக்கு சென்று சிவன், அம்பாளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மன குழப்பத்தை நீக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க உதவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22
*****************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago