- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
இந்த வாரம் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களில் வேகம் பிறக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒரு வேலையைச் செய்யும்போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
» சிம்மம், கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! 24 முதல் மார்ச் 2ம் தேதி வரை
» மிதுனம், கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! 24 முதல் மார்ச் 2ம் தேதி வரை
தொழில் வியாபாரத்தில் புத்தி சாதுர்யத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும்போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்ப்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு எந்த ஒரு வேலையைச் செய்யும்போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் இணக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களைப் படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுகூலம் உண்டாகும்.
*********************************************************************************************
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
இந்த வாரம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். வீண் பிரச்சினைகள் அகலும். நண்பர்கள் உறவினர்களுடன் நீடித்து வந்த மனவருத்தம் நீங்கும். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டுத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப் பளு கூடும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம்.
கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வார்த்தைகளைக் கையாளும்போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுவது நல்லது. கலைத்துறையினர் வாக்கு சாதுர்யத்தால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக யோசித்து செயல்பட்டால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: அம்மனை வணங்கி வர பிரச்சினைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும்.
******************************************************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago