சிம்மம், கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! 24 முதல் மார்ச் 2ம் தேதி வரை 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


இந்த வாரம் எடுக்கும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். புதிய வீடு வாகனச் சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலைப் பளுவும் ஏற்படலாம். வார்த்தைகளில் நிதானம் அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எதிலும் ஈடுபடுவது நல்லது. கலைத்துறையினருக்கு பணத் தேவை உண்டாகும். அரசியல்வாதிகள் மனதில் இருந்து வந்த கலக்கம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் கிடைக்கும்.


பரிகாரம்: சிவனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
***********************************************************************************


கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


இந்த வாரம் பொருள் வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மேல்மட்டத்தில் இருக்கும் நபர்களுடன் பழக்கவழக்கம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.


பரிகாரம்: பைரவரை வணங்கி வர எல்லா நலன்களும் உண்டாகும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.
***********************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்