கும்பம், மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! பிப்ரவரி 17 முதல் 23ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)


இந்த வாரம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையைக் கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். அலைச்சலைத் தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நன்மையைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. எடுத்துக் கொண்ட பணிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும்.

குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு லாபங்கள் பெருகும். தடைபட்ட புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். அரசியல்வாதிகள் தங்கள் செயல்களை செம்மையுற திருத்தமாக செய்வீர்கள். மாணவர்களுக்கு கோபத்தைக் குறைத்து நிதானத்தை கடைப்பிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.


பரிகாரம்: தினமும் முருகனை வணங்கி வர பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.
******************


மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


இந்த வாரம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். அத்துடன் பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும்.

கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். சக ஊழியர்கள் மூலம் நீங்கள் எடுத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சுபச் செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். கலைத்துறையினருக்கு செலவினங்கள் குறையும். அரசியல்வாதிகளுக்கு தைரியம் கூடும். மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.


பரிகாரம்: தினமும் சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்றுவர எடுத்த முயற்சிகள் கை கொடுக்கும்.
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்