- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
இந்த வாரம் திடீர் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் தடை ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியைச் சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலிடத்திலிருந்து கனிவான செய்திகள் உங்களைத் தேடி வரும்.
» மீன ராசி அன்பர்களே! பிப்ரவரி மாத பலன்கள்; பண வரவு கூடும்; காரியத் தடை நீங்கும்; சாமர்த்தியசாலி
» மகர ராசி அன்பர்களே! பிப்ரவரி மாத பலன்கள்; பண வரவு கூடும்; வேலை நெருக்கடி; முயற்சியில் தடை!
குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் இருந்து வந்த சுணக்க நிலை நீங்கும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை நீங்கும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.
பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் வந்து சேரும்.
********************
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
இந்த வாரம் வீண் வாக்குவாதங்கள் அகலும். எந்தக் காரியத்தையும் சிறிது முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.
குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். தாயார் மற்றும் தாய் வழி உறுப்பினர்களுடன் இருந்து வந்த ஊசல்கள் நீங்கும். பெண்களுக்கு காரியங்களைச் செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் காவல் தெய்வ ஆலயத்திற்குச் சென்று வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சினை தீரும். பொருளாதாரச் சிக்கல்கள் அகலும்.
**********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago