துலாம், விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - பிப்ரவரி 3 முதல் 9ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


இந்த வாரம் மங்கல காரியங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். பணவரத்து சீராக இருக்கும். புதிய புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். வேலைப் பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சினைகள் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலைப் பளு ஆகியவை அதிகரிக்கும். மாணவர்களுக்கு அடுத்தவரைப் பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலிப் பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு வேலைப்பளு ஏற்படும். அரசியல்வாதிகளின் மீது மேலிடத்தின் கவனம் விழும்.


பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்பக் கஷ்டங்கள் நீங்கும்.
******************


விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)


இந்த வாரம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சினையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள்.

வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பெண்கள் எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். பயணங்களின்போது கவனம் தேவை. மாணவர்கள் சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சக தோழர்களின் ஆதரவு கிடைக்கும்.


பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்