சிம்மம், கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! - பிப்ரவரி 3 முதல் 9ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


இந்த வாரம் நல்ல பலன்கள் உண்டாகும். தான தர்மம் செய்யவும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். எந்த ஒரு விஷயத்திலும் அதீத கவனம் தேவை. முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளைச் செய்வது நல்லது. உத்தியோக மாற்றம் உண்டாகலாம்.

குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மாணவர்களுக்கு தடைகளைத் தாண்டி கல்வியை கற்கச் செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு குழப்பம் நீங்கும். அரசிய்லவாதிகளுக்கு பதவி கிடைக்கும்.


பரிகாரம்: தினமும் பைரவரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.
*****************************************************************


கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தடங்கல்கள் அகலும். மனக்கவலை நீங்கி சந்தோஷம் உண்டாகும். சொன்ன வார்த்தையை காப்பாற்றி நன்மதிப்பு பெறுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உதிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை கையாளும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு வீண் பழி ஏற்படலாம்.
பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி வலம் வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்