- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் ஆட்சி சஞ்சாரத்தால் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சினைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்கப் பெறலாம். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன் மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். பெண்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். கலைத்துறையினர் மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்கள் நிதானத்தை கடைப்பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.
பரிகாரம்: விநாயகருக்கு தீபம் ஏற்றி வணங்க மனக் கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.
*****************
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்):
இந்த வாரம் அடுத்தவரின் செயல்கள் உங்களுக்கு கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தனப் போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளைப் பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். சுபச்செலவும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும்.
பணிச் சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் வீண் செலவைக் குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்..
பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வழிபட்டு வர கடன் பிரச்சினை குறையும். முன்னேறுவதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
*******************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago