கும்பம், மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! ஜனவரி 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கும்பம்:


எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண துடிக்கும் குணமுடைய கும்ப ராசி அன்பர்களே!


இந்த வாரம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்தக் காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிறு விஷயத்திற்கு கூட உணர்ச்சிவசப்பட்டு பேசுவதினால் பிரச்சினைகள் எழக் கூடும். பழைய கடன்களை முற்றிலுமாக அடைத்து மன நிம்மதி பெறுவீர்கள்.

வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாதது மன வருத்தத்தை தரும். மொத்தத்தில் அதிருப்தியான வாரமிது. தொழில்துறையினர் முன்னேற்றம் அதிகமாகும். அவ்வப்போது மனச்சோர்வு ஏற்பட்டு மறையும். கொடுக்கல்-வாங்கலில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம் அதனால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது அதிக கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

மேற்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடி வரும். அதை எதிர் கொள்வதன் மூலம் சிறந்த எதிர்காலம் காத்துள்ளது. உங்களுக்கு நண்பர்களால் பிரச்சினை ஏற்படும். அதனால் மன நிம்மதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பெண்களுக்கு பிரச்சினையில்லாத வாரம் இது. பணிக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. கணவன் - மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.


பரிகாரம்: பெருமாளுக்கு வெண் தாமரையால் அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
************************

மீனம்:


முன்கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்டப் பாதையில் முன்னேற்றங்கள் பல காணும் மீன ராசி அன்பர்களே!


இந்த வாரம் வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு நிறுவன மாற்றமோ அல்லது ஊர் மாற்றமோ ஏற்படக்கூடும்.அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

நன்கு அறிமுகமான நபர்கள் சிலர் தங்களுக்கு உதவுவார்கள். தொழில் உற்பத்தி அமோகமாக இருக்கும். வருமானம் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு கைக்கு கிடைப்பது நிம்மதியைத் தரும். ஏற்றுமதி இறக்குமதி துறையினருக்கும் அனுகூலமான வாரமிது. வியாபாரத்திலும் நன்மை அளிக்கக்கூடிய வாரமாக இது அமையும். புது வாடிக்கையாளர்கள் மனதில் மகிழ்ச்சியை அளிப்பார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும்போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.

மாணவமணிகளுக்கு மனதில் ஏற்பட்டு வந்த சஞ்சலங்கள் விலகுவதால் படிப்பில் கவனம் திரும்பும். விடுமுறை நாட்களில் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள். மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண் மணிகளுக்கு பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். வேலை பார்த்து வரும் பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரம் என்றே சொல்ல வேண்டும். தொய்வின்றி வேலைகள் நடக்கும்.


பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கி வர வறுமை நீங்கும். கல்வியறிவு பெருகும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்