துலாம், விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! ஜனவரி 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


துலாம்:


முடிவுகள் எடுக்கும் தருணத்தில் மனக்குழப்பம் ஏற்படும் துலா ராசி அன்பர்களே!


இந்த வாரம் ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் இப்போது சரியாகிவிடும். அதனால் மன நிம்மதி பெறும். பண வரவிற்கு குறைவிருக்காது. செலவுகள் ஏற்பட்டாலும் தங்களால் அதை சமாளித்து விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை. தொழிலில் உற்பத்தி சுமாராக இருக்கும். வருமானமும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. புதிய முயற்சிகளில் இறங்குவதை சற்று தள்ளிப் போடவும். வியாபாரத்தில் முன்னேற்றம் எதையும் இந்த வாரம் எதிர்பார்க்க முடியாது. எனவே பொறுமையாக இருந்து வருவது அவசியம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு.


திருமண வயதில் உள்ள துலாம் ராசி அன்பர்களின் மனதிற்கு பிடித்த வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்படும். வழக்குகள் இந்த வாரம் முடிவுக்கு வரும். மொத்தத்தில் மகிழ்ச்சியான வாரம். மாணவமணிகள் பள்ளிக்கு வரும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அண்டை அயலாருடன் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனவே கூடியவரை வீண்விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பெண்கள் மனதில் விரக்தி மனப்பான்மை ஏற்படக்கூடும். வேலை பார்த்து வரும் பெண்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு ஏற்பட வாய்ப்புள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் புதிய கடனை ஏற்க வேண்டாம்.


பரிகாரம்: தினமும் துர்காதேவியை வணங்கி வாருங்கள். துர்காஷ்டகம் படியுங்கள்.
**************************

விருச்சிகம்:


தெளிவான முடிவுகளை உறுதியுடன் எடுக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!


இந்த வாரம் குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். செலவுகள் அனைத்தும் இந்த வாரம் கட்டுக்கடங்கி இருக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் உங்களுக்கு உற்சாகத்தை தரும். தக்க தருணத்தில் பிறருக்கு உதவுவதால் அவர்களது ஆசியும் பாராட்டுகளும் கிடைக்கப்பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் முன்னேற்றம் எதையும் இந்த வாரத்தில் எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு தாங்களே எதிர்பாராத வகையில் ஊர் மாற்றம் ஏற்படக்கூடும். அதனால் தாங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும். தொழில் உற்பத்தி நல்லபடி இருக்கும். வருமானம் திருப்தி தரும். புதிய அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாரம் தாராளமாக மேற்கொள்ளலாம். சக பாகஸ்தர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

நீண்ட நாளைய வழக்கு ஒன்று உங்களுக்கு சாதகமான தீர்ப்பைக் கொண்டு வரும். குடும்ப பொறுப்புகளின் காரணமாக உழைப்பு வழக்கத்தைவிட சற்று அதிகரித்து காணப்படும். அதனால் மனதில் விரக்தி உண்டாகும். மாணவமணிகள் விளையாட்டுப் போட்டிகளில் இந்த வாரம் கலந்து கொள்ள வேண்டாம். சிறுசிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளியிடங்களுக்கு தனியாக செல்ல வேண்டாம்.தேவையான அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் எதிலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது அவசியம். வேலைக்கு சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் அதி ஜாக்கிரதையாக இருந்து வருவது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.


பரிகாரம்: மஞ்சள் நிற பூக்களைக் கொண்டு குரு பகவானை வழிபடுங்கள்.
************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்