- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிதுனம்:
பண வரவை அதிகம் எதிர்பார்க்கும் மிதுன ராசி அன்பர்களே!
இந்த வாரம் குடும்பத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்குமா என்றால் சந்தேகம் தான். வீண் செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு இல்லை. உத்தியோகஸ்தர்களைப் பொறுத்த வரை வேலைக்கு விண்ணப்பித்து இதுவரை தகவல் வரவில்லையே என மனம் வருந்தி வந்தவர்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது. தற்போது பணியில் இருந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு ஒன்று இந்த வாரத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது மனநிறைவைத் தரும். பண பரிமாற்றம் செய்ய வேண்டி இருந்தால் வாரத்தின் பிற்பகுதியில் செய்யவும். வியாபாரம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவீர்கள்.
» 2022 எப்படி இருக்கும்? திருவோணம் நட்சத்திர அன்பர்களே! வீண் செலவு; ஆரோக்கியத்தில் கவனம்; வேலைப்பளு!
அதற்காக கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம். அது கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். புதிய வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பின் அதற்கான முயற்சிகளை இவ்வாரம் மேற்கொள்ளலாம். அதில் வெற்றி கிடைக்கும்.
திருமண முயற்சிகளில் அவசரப்படவேண்டாம். எதையும் சற்று தீர ஆராய்ந்து பார்த்து பின்பு முடிவு எடுக்கவும். கணவன் மனைவியிடையே அந்நியோன்யம் குறையும். பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள். பெருமாளுக்கு துளசி அணிவியுங்கள்.
************************
கடகம்:
எதிலும் பொறுமையுடன் இருக்கும் கடக ராசி அன்பர்களே!
இந்த வாரம் குடும்பத்தில் சற்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். எடுத்தோம் கவிழ்த்தோம் என அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் பயணங்கள் மேற்கொள்ளும் போதும் தங்கள் பணம் உடமைகள் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். மனதில் நிம்மதி இருக்காது. பிறரிடம் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில் தாங்களே எதிர்பாராமல் கோபப்பட்டுவிடுவீர்கள். அதை தவிர்த்திடுங்கள். நிதி நிலையில் மாற்றம் இருக்காது என்றாலும் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம்.
வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். குடும்பத்தில் சில பொருள்கள் களவு போக வாய்ப்பு உள்ளது. அன்பர்கள் சிலர் தங்களின் குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதற்கு சாதகமாக கிரக நிலைகள் அமைந்துள்ளன. பெண்கள் முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சக மாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
பரிகாரம்: தினமும் அஷ்ட லட்சுமியை வணங்கி வாருங்கள். தாமரை மலர் கொண்டு பூஜியுங்கள்.
***************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago