- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்
சென்ற வாரம் உத்திரட்டாதி நட்சத்திரம் பற்றி விரிவாகக் கண்டோம். இந்த வாரம் நாம் ரேவதி நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் காணலாம்.
ரேவதி
ரேவதி என்பது வானத்தில் மீன ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். நாம் கண்களில் காணும் போதும் இரு மீன்கள் போலவும், படகு போலவும், தோணி போலவும், கப்பல் போலவும் காட்சி அளிக்கும். ஆகவே இதன் வடிவமாக இரு மீன்கள், படகு, தோணி, கப்பல் ஆகியவற்றைக் கூறலாம்.
இதன் அதிபதி புதன் கிரகம். இது நீல வண்ணத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு புதன் திசையே முதலில் தொடங்கும். இந்த ராசியில் குரு பலம் பெறுகிறது. ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு புதன் மற்றும் குரு பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்த மாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
அபிமன்யுவும் சக்ரவியூகமும்
கிருஷ்ணரின் தங்கை கருவுற்று இருக்கும்போது, கருவிலிருந்த அபிமன்யு, சக்ரவியூகம் உடைப்பதை பற்றி உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் சக்ரவியூகத்திலிருந்து வெளி வரும் யூகத்தை முழுமையாக அறியாமல் சந்தர்ப்ப வசத்தால் பாதியிலேயே கேட்பதை நிறுத்தும் நிலைக்கு ஆளாகும். எனவே பிறப்பதற்கு முன்பே சக்ரவியூகத்தை உடைப்பதை பற்றி பாதியாக அறிந்திருந்தான் அபிமன்யு.
இதை தாரை விளக்கமாக பார்க்கலாம். அபிமன்யுவின் ஜென்ம நட்சத்திரம் ரேவதி. கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் ரோகிணி. ரோகிணி என்பது சகடம் எனும் சக்ர வடிவம் கொண்டது. ரேவதி நட்சத்திரத்திற்கு ரோகிணி சிக்கல் தரும் பிரத்யக்கு தாரை ஆகும். எனவே அபிமன்யு வாழ்க்கையில் மூன்று விதத்தில் ரோகிணி வடிவங்கள் சிக்கல்களைத் தந்தன.
1. முதலில் சக்ர வியூகம் என்பது ரோகிணி வடிவானது. எனவே அதில் புகுந்ததும் சிக்கலில் மாட்டினான் அபிமன்யு.
2. அதுபோல சக்ரவியூகத்தினுள் மாட்டிக்கொண்டு அனைத்து ஆயுதங்களையும் இழந்தபின் தேர்ச் சக்கரத்தை ஆயுதமாக உபயோகித்தது அவனது மரணத்திற்கு காரணமானது.
3. கடைசியாக ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த கிருஷ்ணரால் உதவ முடியாமல் போனது.
அவை மட்டுமே அல்லாது ரோகிணியில் பிறந்த கிருஷ்ண பகவான், ரேவதியில் பிறந்த அபிமன்யுவுக்கு பிரத்யக்கு தாரை என்பதால், கிருஷ்ணரால் அபிமன்யுவிற்கு உதவி செய்ய முடியவில்லை.
இறைவனாக இருந்தாலும் பிரபஞ்ச விதியை மீறலாகாது என்பது இதன் மூலம் புலனாகிறது. எனவே நட்சத்திர தாரை அறிந்து வாழ்க்கையை நடத்த, சிக்கலான சூழலில் மாட்டிக்கொள்ளாமல் தற்காத்துக்கொள்ளலாம்.
அபிமன்யுவின் குரு
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த மகாபாரத கதாபாத்திரம் அபிமன்யு ஆகும். அபிமன்யு ஒரு மிகச்சிறந்த போர்வீரன். இவர் போர்த் தந்திரங்கள் அனைத்தும் பலராமனிடம் இருந்து கற்றுக் கொண்டார். அபிமன்யுவின் குரு பலராமன் ஆவார்.
பலராமனின் நட்சத்திரம் ஆயில்யம். ஆயில்யம் புதனின் நட்சத்திரம். அதுபோலவே ரேவதியும் புதனின் நட்சத்திரமே ஆகும்.
ரேவதி நட்சத்திரத்தின் அனுஜென்ம தாரை ஆயில்யம். ஆகவே பலராமன் தன் தாய்மாமனாக இருந்தாலும், அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு கல்வி மற்றும் போர் வித்தைகளை கற்றுக் கொண்டார் அபிமன்யு.
ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தின் அனுஜென்ம தாரையாக வரும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை, தன் மானசீக குருவாக ஏற்றுக் கொள்ள அவர்களிடமிருந்து பல அரிய வித்தைகளை நாம் கற்றுக் கொள்ளலாம்.
தாரை வடிவ அதிசூட்சுமம்
ஒரு ஜோதிட சூட்சுமம் சொல்கிறேன். கூர்ந்து கவனிக்கவும். ஒரு ராசியில் மூன்று நட்சத்திரங்கள். அதில் ஒரு நட்சத்திரம் மட்டுமே நடுவில் வரும். அந்த நடுவில் வரும் நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள் அந்த ராசியின் வடிவத்தையே பயன்படுத்தி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளலாம்.
உதாரணமாக, துலா ராசியில் சித்திரை, சுவாதி, விசாகம் என மூன்று நட்சத்திரங்கள் வரிசையாக அமைந்திருக்கும். இதில் நடுவிலுள்ள நட்சத்திரம் சுவாதியாகும். எனவே சுவாதி நட்சத்திர நபர்கள் துலா ராசியின் சின்னமான தராசுத் தட்டினை பயன்படுத்தி தன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.
இதுபோல நடு நட்சத்திரங்களை பட்டியலிடுகிறேன் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பரணி - ஆட்டுத்தலை
ரோகிணி - காளை மாட்டின் தலை
திருவாதிரை - இரு குழந்தைகள்
பூசம் - நண்டு
பூரம் - சிங்கம்
அஸ்தம் - பகவதியம்மன்
சுவாதி - துலாம்
அனுஷம் - தேள்
பூராடம் - குதிரை மனிதன் வில் தாங்கிய உருவம்
திருவோணம் - முதலை
சதயம் - கும்பம்
உத்திரட்டாதி - இரண்டு மீன்கள்
- நிறைவுற்றது
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago