விசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள்; ஜனவரி 9ம் தேதி வரை

By செய்திப்பிரிவு


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


விசாகம் -


நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் தாமாகவே தேடி வரும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். இப்போது பணிபுரியும் இடத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு மாறும் வாய்ப்புகள் உண்டு. தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். புதிய கிளைகள் தொடங்குவார்கள். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சகோதரர்களிடம் பேசி நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். ஒரு சிலர் தாங்கள் பணிபுரியும் வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
செலவுகள் அதிகமாக இருக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி தள்ளிப் போகலாம். வியாபாரத்தில் நிகரான போக்கையும், கவனத்தையும் கொள்ள வேண்டும்.

செவ்வாய்-
பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி முன்னேற்றம் இருக்கும்.

புதன் -
குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்கும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஒரு சில எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு ஏற்படும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் பற்றிய தகவல் உறுதியாகி மகிழ்ச்சியைத் தரும். பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவு கிடைக்கும்.

வெள்ளி -
வேலை தொடர்பான விஷயங்களில் இருந்த நெருக்கடிகள் விலகும். புதிய தொழில் தொடங்குவது பற்றி ஆலோசனை செய்வீர்கள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். திருமணம் தொடர்பான தகவல் உறுதியாகும்.

சனி-
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக பயணங்கள் ஏற்படும். முக்கிய நபர்களின் சந்திப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய நபர்களின் சந்திப்பு நம்பிக்கை தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
தட்சிணாமூர்த்தி குருபகவானை வணங்கி வாருங்கள். நன்மைகள் பெருகும். தடைகள் அகலும்.
*****************


அனுஷம் -


எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் தோன்றி மறையும். கணவன் அல்லது மனைவியின் உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்படும். தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களோடு இணைந்து பணியாற்றும் நிலையும் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலுக்கு அரசு உதவிகளும் வங்கியின் கடன் உதவியும் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். மிகப் பெரிய ஆதாயம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளும், வியாபார வாய்ப்புகளும் கிடைக்கும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.

செவ்வாய் -
அலுவலகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலை இருக்கும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கக் கூடிய நாளாக இருக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும்.

புதன் -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் துணையோடு பணிகளைச் செய்து முடிப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும் தொழில் வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன் -
வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபார வளர்ச்சி ஏற்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது இருக்கும் வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். கையாளும் பொருட்களில் கவனமாக இருக்கவேண்டும். ஞாபக மறதி அதிகரிக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

ஞாயிறு -
நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பார்வதி அன்னையை வணங்குங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
***************


கேட்டை -


தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளும் வாரம். பணம் பல வழிகளிலும் வரும். எந்த முயற்சியிலும் ஆதாயம் கிடைப்பதாகவே இருக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகள் படிப்படியாக தீரும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் அகலும். சொத்து தொடர்பான பிரச்சினைகளைப் பேசி முடிக்கும் வாய்ப்பு உள்ளது. வழக்கு தொடர்பான பிரச்சினைகள் சுமுகமான நிலையை எட்டும். அலுவலகத்தில் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்துமுடித்து உயரதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் தாமதங்கள் அகலும், முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் புதிய கிளைகள் ஆரம்பிப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக செய்து முடிப்பீர்கள். அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்து முடித்து பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

செவ்வாய் -
பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். புதிய வாடிக்கையாளர்கள் அல்லது புதிய வியாபார தொடர்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சகோதர வகையில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

புதன் -
நிதானமாக செயல்பட வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தள்ளிவைக்க வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தினர்களிடம் கோபத்தைக் காட்டாமல் இருக்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய தகவல் வந்து சேரும். பெண்களுக்கு எதிர்பாராத உதவிகளும், நன்மைகளும் கிடைக்கும்.

வெள்ளி -
பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். முக்கியமான ஒப்பந்தங்கள் எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முடிவுக்கு வரும்.

சனி -
கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.

ஞாயிறு -
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபார நிமித்தமாக பேச்சுவார்த்தைகள் மனநிறைவை ஏற்படுத்தித் தரும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மன் வழிபாடு செய்யுங்கள். அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்